சீபேர்ட் திட்டத்தில் புதிய உள்கட்டமைப்பு வசதிகள் – கார்வாரில் வைஸ் அட்மிரல் சஞ்சய் வத்சயன் திறந்து வைத்தார்.

கார்வார் கடற்படைத் தளத்திற்குத் தேவையான வசதிகள் பிராஜக்ட் சீபேர்ட் என்ற திட்டத்தில் படிப்படியாக மேம்படுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, நவீன வசதிகள் திறந்து வைக்கப்பட்டன.

மேற்கு கடற்படை கட்டளையகத்தின் தலைமைத் தளபதியான வி.அட்மிரல் சஞ்சய் வத்சயன், மூத்த அதிகாரிகள் முன்னிலையில், கார்வார் கடற்படைத் தளத்தில் நேற்று முன்தினம் (15 அக்டோபர் 2026) இவற்றைத் திறந்து வைத்தார்.

திறந்து வைக்கப்பட்டவற்றில் கடற்படையினருக்கான குடியிருப்புகள், சுகாதார வளாகம் ஆகியவை அடங்கும்.

இந்த உள்கட்டமைப்பு மேம்பாடுகள், சீபேர்ட் திட்டத்தின் தற்போதைய இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply