மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது விசைப் படகுகளையும் மத்திய அரசு உடனடியாக மீட்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளத்தை சேர்ந்த 25 மீனவர்கள் மூன்று படகுகளில் மீன்பிடிக்க சென்றபோது மாலத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்டது மிகவும் கண்டிக்கதக்கது.

மாலத்தீவு கடற்படை, தமிழக மீனவர்கள் சர்வதேச எல்லையை தாண்டி மாலத்தீவு எல்லைப் பகுதியில் மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளார்கள்.

தமிழக மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் மிகுந்த வருத்தத்தையும், அச்சத்தையும் ஏடுத்தியுள்ளது. கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இன்னலுக்கு ஆளாக்கப்படுவது வேதனைக்குரியது.

மத்திய அரசு தமிழக மீனவர்கள் பாதுகாப்பில் தனி கவனத்தோடும், அக்கரையோடும் செயல்பட வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக மீட்ட வேண்டும். இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உரிய உத்திரவாதமும், பாதுகாப்பும் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply