பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட இமயமலை கல் உப்பை சட்டவிரோதமாக இறக்குமதி செய்யும் முயற்சியை வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் முறியடித்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மீதான தடையை அமல்படுத்தும் விதமாக ஒரு பெரிய அளவிலான சோதனை நடவடிக்கையை ‘ஆபரேஷன் டீப் மேனிஃபெஸ்ட் என்ற நடவடிக்கையின் கீழ், மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (டிஆர்ஐ) மேற்கொண்டு வருகிறது.

இதன்படி, 7,311 மெட்ரிக் டன் பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட இமயமலை கல் உப்பை ஏற்றிச் செல்லும் 295 கன்டெய்னர்களை டிஆர்ஐ அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். இதன் சந்தை மதிப்பு ரூ. 30 கோடியாகும். இந்த சரக்குகள் இலங்கையின் கொழும்பு துறைமுகம் வழியாக அனுப்பப்பட்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட நிறுவனங்களால் வழங்கப்பட்ட போலியான சான்றிதழ்கள்,  விலைப்பட்டியல்களைப் பயன்படுத்தி அவை இறக்குமதி செய்யப்படும் நாட்டை மறைத்து கடத்தி வரப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

உளவுத்துறை அளித்த குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில், டிஆர்ஐ அதிகாரிகள் 2026 செப்டம்பர் 26 மற்றும் அக்டோபர் 11 ஆகிய தேதிகளுக்கு  இடையில் ஒருங்கிணைந்த, 15 நாள் சோதனை நடவடிக்கையில், காந்திதாம், பானிபட், புனே, டெல்லி, மும்பையில் உள்ள வளாகங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply