சர்வதேச செலாவணி நிதியம், உலக வங்கி குழுமத்தின் வருடாந்திரக் கூட்டங்கள், ஜி20, ஜி7 நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டங்களில் பங்கேற்பதற்காக, மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2026 அக்டோபர் 14 முதல் 18 வரை தாய்லாந்தின் பாங்காக்கிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.
அவரது இந்தப் பயணத்தின்போது, தற்போதைய பொருளாதார நிலைகள், நிதித்துறை சார்ந்த விவகாரங்கள் உள்ளிட்ட உலகளவில் முக்கியதத்துவம் வாய்ந்த பொருளாதார, நிதிப் பிரச்சினைகள் குறித்த பலதரப்பு கூட்டங்கள், கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.
உலகளவில் பொருளாதார கண்ணோட்டம், சர்வதேச நிதி ஒத்துழைப்பு ஆகியவை குறித்த கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள இந்தக் கூட்டங்கள் வாய்ப்பளிக்கும்.
மேலும், தாய்லாந்து நாட்டின் துணைப் பிரதமரும், நிதியமைச்சருமான திரு எக்னிதி நிதிதான்பிரபாஸ், சுவிட்சர்லாந்து, ஜப்பான், லக்சம்பர்க், பூட்டான், குராகோ ஆகிய நாடுகளின் நிதியமைச்சர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் திருமதி நிர்மலா சீதாராமன் திட்டமிட்டுள்ளார்.
எம்.பிரபாகரன்
