ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உடன் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் சந்திப்பு.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தமிழக முதல்வர் விஜய் இன்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது கோதாவரி – கிருஷ்ணா – காவிரி ந​திகள் இணைப்​பு, கிருஷ்ணா நதி நீர் பங்​கீடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக விஜய், ஆந்திர மாநிலத்துக்கு சென்றுள்ளார். இதற்காக அவர் இன்று பிற்பகல் சென்னையிலிருந்து தனி விமானம் மூலமாக விஜயவாடாவுக்கு சென்றார். 3.45 மணியளவில் விஜயவாடா விமான நிலையம் சென்றடைந்த முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் விஜய், அங்கிருந்து 30 கி.மீ. தொலைவில் கிருஷ்ணா நதிக்கரையில் இந்திரகீலாத்ரி மலையில் உள்ள கனக துர்கா கோயிலுக்கு சென்றார்.

Leave a Reply