பாதுகாப்பு அமைச்சர் செக் குடியரசின் தொழில்துறை அமைச்சருடன் இருதரப்பு பேச்சு நடத்தினார்.

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் செக் குடியரசின் முதலாவது துணைப்பிரதமரும் தொழில், வர்த்தக அமைச்சருமான திரு கரேல் ஹவ்லிசெக்குடன் புதுதில்லியில் 2026 அக்டோபர் 13 அன்று இருதரப்பு பேச்சு நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு தளவாட தொழில்துறையின் ஒத்துழைப்பின் முழு அம்சங்கள் குறித்தும் இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். தற்போதுள்ள ஒத்துழைப்பு, பல்வேறு கூட்டு முயற்சிகள் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளதையும் இருதரப்பினரும் வரவேற்றனர். இந்தியாவில் தயாரிப்போம், தற்சார்பு இந்தியா ஆகிய திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தியா செக் குடியரசு இடையே கூட்டுப்பாதுகாப்பு குழுவின் கீழ், ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் ஒப்புக்கொண்டனர்.

அமைதி, பாதுகாப்பு தொடர்புடைய விவகாரங்க்ள குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். பிராந்திய ஸ்திரத்தன்மையை கடைபிடிப்பதற்கு அதிக ஒத்துழைப்பு தேவை என்பதை ஏற்றுக்கொண்டனர். இந்தியா-செக் குடியரசு இடையேயான கூட்டாண்மை, வரலாறு, கலாச்சார உறவுகள், பரஸ்பர நம்பிக்கை, மரியாதை ஆகிய பகிரப்பட்ட மாண்புகளை அடிப்படையாகக் கொண்டது என்று அவர்கள் மீண்டும் வலியுறுத்தினார்கள்.

நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள திரு கரேல் ஹவ்லிக் பல்வேறு அமைச்சக, வர்த்தக பிரதிநிதிகளுடன் உரையாடுகிறார். பெங்களூரு, மும்பையிலுள்ள பல்வேறு தொழிற்சாலைகளையும் அவர் பார்வையிட உள்ளார்.

Leave a Reply