சென்னை உயர்நீதிமன்றம் இன்று (அக்டோபர் 13, 2026) அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்புரையின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு நாம் பதிவு செய்துள்ளோம்.
agri-sskrishnamurthy-v-the-speaker-706140
வழக்கின் பின்னணி: தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சியில் இணைந்த ஆறு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் (மரகதம் குமாரவேல், சத்யபாமா, இசக்கி சுப்பையா, ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர்) ராஜினாமாவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் ஏற்றுக் கொண்டது சரியானது என நீதிமன்றம் உறுதி செய்தது.
உயர்நீதிமன்ற உத்தரவு:
ஆறு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல் அரசியலமைப்புச் சட்டப்படி செல்லும் என்று தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதேசமயம், அவர்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் குறித்து சபாநாயகர் 2 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது
இதன் மூலம் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் எம்.எல். ரவி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.
–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA TEAM
editorutlmedia@gmail.com
இது தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பைக் ‘கிளிக்’ செய்யவும்.https://www.ullatchithagaval.com/2026/09/07/123585/
