தமிழ்நாட்டில் முழு நேரமாக பணியாற்றுவதற்கு நிரந்தர ஆளுநரை, நியமனம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ அவர்களுக்கு, நமது “UTL MEDIA” செய்தி நிறுவனத்தின் இயக்குநரும், உள்ளாட்சித்தகவல் ஆசிரியரும், வெளியீட்டாளருமான டாக்டர் துரை பெஞ்சமின் அவர்கள் 07. 05 .2026 அன்று கடிதம் எழுதி இருந்தார்.
THE-PRESIDENT-OF-INDIA-Lr-07.05.2026-1
அக்கடிதத்தில், 2026-ஆம் ஆண்டின் நிலவரப்படி, இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இந்த நிர்வாகப் பிரிவுகள் ஒவ்வொன்றும் தனித்துவமான கலாச்சாரம், மொழி மற்றும் நிர்வாக அமைப்பைக் கொண்டுள்ளன.
ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாண்புமிகு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றனர்.
மாநிலத்தில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தல், மாநில அரசின் நிர்வாக நடவடிக்கைகளைக் கண்காணித்தல், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தல் மற்றும் சட்டப்படி ஆட்சி நடப்பதை உறுதிச் செய்தல்… இப்படி பல்வேறு முக்கியப் பணிகள் மாண்புமிகு ஆளுநரின் கடமையாகும்.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலம் உள்பட ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. மற்ற மாநிலங்களுக்கு முழு நேரமாக பணியாற்றுவதற்கு நிரந்தர ஆளுநர்கள் உள்ளனர்.
ஆனால் தமிழ்நாட்டிற்கு மட்டும் கேரளா மாநில ஆளுநராக இருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பொறுப்பு ஆளுநராக வந்து போய்க் கொண்டிருக்கிறார்.
ஒரே நேரத்தில் கேரளா மாநிலத்திலும், தமிழ்நாட்டிலும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணங்கள் செய்து வைக்க வேண்டிய அவசியமும், அது சம்பந்தமாக அரசியல் கட்சித் தலைவர்கள் ஆளுநரை அடிக்கடி சந்தித்து ஆலோசிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. ஒரே நபர் கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கும் ஆளுநர் பொறுப்பை நிர்வகித்து வருவதால் காலதாமதங்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. மேற்காணும் நிர்வாக சிரமங்களைத் தவிர்ப்பதற்காக தமிழ்நாட்டிற்கு முழு நேரமாக பணியாற்றுவதற்கு நிரந்தர ஆளுநர் ஒருவரை பணியமர்த்த வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.
எனவே, இதற்கு மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவராகி தாங்கள் தான் அதற்கான உரிய ஏற்பாடுகளையும், உத்தரவையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
அந்தக் கோரிக்கை நேற்று (12.10.2026) தான் நிறைவேறி உள்ளது. ஆம், தமிழ்நாட்டிற்கு மட்டும் முழு நேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவரின் கூடுதல் செயலாளர் அனிதா மேஸ்ராம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.
–கே. பி. சுகுமார்., B.E., UTL MEDIA TEAM, ullatchithagaval@gmail.com
இது தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பைக் ‘கிளிக்’ செய்யவும். https://www.ullatchithagaval.com/2026/05/07/119882/
