இந்திய கடற்படைக் கப்பலான சயாத்ரி, 2026 அக்டோபர் 13 முதல் 18 வரை நடைபெறவுள்ள, இந்திய – ரஷ்ய கடற்படைக்கு இடையேயான இருதரப்புப் பயிற்சியான இந்திரா 2026-ல் பங்கேற்பதற்காக, 2026 அக்டோபர் 10 அன்று ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் சென்றடைந்தது. இந்தப் பயிற்சி, இரு கடற்படைகளுக்கும் இடையே தொழில்முறை ஈடுபாடுகளையும் செயல்பாட்டு ரீதியான தொடர்புகளையும் மேம்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கும். அத்துடன், கடல்சார் ஒத்துழைப்பையும் ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறனையும் இது மேலும் மேம்படுத்தும்.
இந்திரா 2026 பயிற்சியானது, துறைமுகக் கட்டத்தின் போது நடைபெறும் ஈடுபாடுகளையும், அதைத் தொடர்ந்து கடலில் ஒருங்கிணைக்கப்பட்ட செயல்பாடுகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
இதில், ஐஎன்எஸ் சயாத்ரியின் பங்கேற்பானது இந்தியா – ரஷ்யா இடையேயான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
எம்.பிரபாகரன்
