நமது வீரர்கள் எப்போதும் தேசத்துக்குத் துணை நிற்கிறார்கள்- நாமும் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் துணை நிற்க வேண்டும்!- குடியரசு துணைத்தலைவர்.

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், இன்று (10.10.2026) ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரில் நடைபெற்ற சைன்ய சம்பர்க் மேளா எனப்படும் முன்னாள் ராணுவத்தினருக்கு உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றார். சந்தால் பர்கானா பகுதி முழுவதும் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்களைச் சார்ந்தவர்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குவதற்காக, ராணுவமும் தியோகர் மாவட்ட நிர்வாகமும் இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தன.

நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர் தேசத்திற்காக விலைமதிப்பற்ற தியாகங்களையும் பங்களிப்புகளையும் செய்த முன்னாள் ராணுவ வீரர்களுக்குப் புகழஞ்சலி செலுத்தினார். ராணுவ வீரர்களும் அவர்களது குடும்பத்தினரும் செய்த தியாகங்களை தேசம் ஒருபோதும் மறக்காது என்று அவர் கூறினார். நமது வீரர்கள் எப்போதும் தேசத்துக்குத் துணை நிற்கிறார்கள் எனவும் நாமும் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் துணை நிற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் படைவீரர்களும் அவர்களது குடும்பத்தினரும் எப்போதும் மதிக்கப்படுவதையும், ஆதரிக்கப்படுவதையும், அக்கறையுடன் கவனிக்கப்படுவதையும் உறுதிசெய்யும் வகையில், இதுபோன்ற விழாக்கள் ஒரு தொடர்ச்சியான தேசிய அர்ப்பணிப்பாக மாற வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சந்தோஷ் குமார் கங்வார், மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், ராணுவத்தின் மூத்த அதிகாரிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

Leave a Reply