புத்தாக்கத்தை விரைவுபடுத்தவும், அறிவியல் ஆராய்ச்சியை வணிக முயற்சிகளாக மாற்றவும், இந்தியாவின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தவும் தொழில்துறையினர் முன்வர வேண்டும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தியுள்ளார்.
இன்று (10.10.2026) புதுதில்லியில் நடைபெற்ற வர்த்தக, தொழில் சங்கத்தின் 121-வது ஆண்டு அமர்வில் உரையாற்றிய அமைச்சர், அறிவியல் திறன்களை உள்நாட்டுத் தொழில்நுட்பங்களாகவும், வணிகரீதியாக சாத்தியமானதாகவும், உலக அளவில் போட்டித்தன்மை வாய்ந்த தீர்வுகளாகவும் மாற்றுவதற்கு அரசு, தொழில் துறை, கல்வித்துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்தியாவின் அடுத்தகட்ட தொழில்நுட்ப வளர்ச்சியானது, பிற நாடுகளில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களைத் தாண்டி, உள்நாட்டுத் தீர்வுகளை உருவாக்குவதை நோக்கி நகர வேண்டும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
எஸ்.சதிஸ் சர்மா
