நவீன விமான இயந்திரங்களின் வடிவமைப்பு, மேம்பாடு, சோதனை, உற்பத்தி, பராமரிப்பு ஆகியவற்றில், உள்நாட்டுத் திறன்களை வலுப்படுத்த வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் கோராபுட் பிரிவு தயாரித்துள்ள 2,000-வது விமான இயந்திரத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய அவர், சக்தி இயந்திரங்களுக்கான இரண்டாவது உற்பத்தி அலகு, இம்மாதம் தொடங்கப்படும் என்று கூறினார்.

இந்தியாவின் விண்வெளி, விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சியில், இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று தெரிவித்த அவர், விண்வெளி, பாதுகாப்புத் துறையில், தன்னிறைவு பெற விமான உந்துவிசை தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற வேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

எச்ஏஎல் நிறுவனத்தின் கோராபுட் பிரிவின் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், விஞ்ஞானிகள், திறன் வாய்ந்தப் பணியாளர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்த அவர், 2,000 விமான இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது, பாதுகாப்புப் படைகளின் செயல்பாட்டுத் திறன் மேம்பாட்டிற்கு உதவிடும் என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

நவீன விமான இயந்திரங்களின் வடிவமைப்பு, மேம்பாடு, சோதனை, உற்பத்தி, பராமரிப்பு ஆகியவற்றில், உள்நாட்டுத் திறன்களை வலுப்படுத்த வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply