நெடுஞ்சாலைகளைத் தரம் உயர்த்துவது தொடர்பான தேசிய அளவிலான மாநாட்டை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.

குஜராத் மாநிலம், ஏக்தா நகரில், தேசிய அளவிலான நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பு மாநாட்டை, மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தொடங்கி வைத்தார். தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பான இந்த மாநாட்டில், மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள், முதலீட்டார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசிய மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி, நெடுஞ்சாலைகள் கட்டமைப்பில் மத்திய, மாநில அரசுகள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில் இந்த மாநாடு அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். சாலைகளின் தரம், பாதுகாப்பு, வேகம், உலகத்தரம் ஆகியவற்றில் நெடுஞ்சலைத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

விரிவான திட்ட அறிக்கையின்படி, சாலைப் பணிகளுக்கான நிலம் கையகப்படுத்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், முறையான அளவீடு ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் திரு நிதின் கட்கரி கேட்டுக்கொண்டார். முன்கூட்டியே திட்டமிடுவதால், பணியில் காலதாமதம் ஏற்படுவது தவிர்க்கப்படும் என குறிப்பிட்ட அவர், தேவையற்றச் செலவுகளைக் குறைக்கலாம் என்றும் கூறினார். பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்தும் அளிக்க வேண்டும் என அறிவுறுத்திய அமைச்சர், சாலை விபத்துக்களைத் தடுக்கும் வகையில் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

Leave a Reply