காகித ஆவணங்களை மின்கோப்புகளாக விரைந்து மாற்ற வேண்டும்!- டாக்டர் ஜிதேந்திர சிங்.

புதுதில்லி சர்தார் பட்டேல் பவனில் அமைந்துள்ள நிர்வாக சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறை அலுவலகத்தை மத்திய அறிவியல், தொழில்நுட்பம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 2026 அக்டோபர் 5 அன்று பார்வையிட்டார்.

அரசு அலுவலகங்களில் தூய்மைப் பணிகளை நடைமுறையாக மாற்றுதல், நிலுவையில் உள்ள பணிகளை குறைத்தல், வளங்களை திறம்பட பயன்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட சிறப்பு இயக்கம் 6.0-ன் முன்னேற்றம் குறித்து அவர் ஆய்வு செய்தார்.

சிறப்பு இயக்கம் 6.0-ன் கீழ் ஆவணங்களை காகிதத்தில் இருந்து மின்கோப்புகளாக மாற்றுவதை விரைவுபடுத்துமாறு அமைச்சர் ஜிதேந்திர சிங் உத்தரவிட்டார்.

Leave a Reply