நடைபெறும் சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் தாராபுரம் த.வெ.க வேட்பாளர் திருமதி. சத்தியபாமா அவர்களை குறித்து தி.மு.க தலைவர் மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் அவர்கள் உருவ கேலி செய்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
பொறுப்புள்ள தலைவர் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பதை மக்கள் ஒருபோதும் விரும்புவது கிடையாது.
குறிப்பாக மகளிரைப் பற்றி பேசுவதை, தேவையற்ற வார்த்தைகளை கூறுவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
எதிர்கட்சிகள் எதிர்ப்புகளை ஜனநாயக முறையில் எதிர்கொள்ள வேண்டும்.
நடைபெறும் இரு சட்டமன்ற இடைத் தேர்தலிலும் த.வெ.க-வின் வெற்றி உறுதியான நிலையில் அவற்றை தாங்கிக்கொள்ள முடியாமல் எதிர்கட்சிகள் தேவையற்ற வார்த்தைகளை பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கே.பி.சுகுமார்
