தமிழ்நாட்டில் முதல் தடையற்ற தானியங்கி சுங்கக் கட்டண முறை அறிமுகம்.

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை -179பி-ன் தாம்பரம் – திண்டிவனம் பிரிவில் உள்ள பரனூர் சுங்கச்சாவடியில், தமிழ்நாட்டின் முதல் பல்தட தடையற்ற தானியங்கி சுங்கக் கட்டண முறை செயல்படுத்தப்பட்டது.

  • வாகனங்களை நிறுத்தாமல் சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்ல வழிவகுக்கும் தடையற்ற சுங்கக் கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் மனிதத் தலையீட்டைக் கணிசமாகக் குறைத்து, எரிபொருளையும் நேரத்தையும் சேமிக்கிறது. மேலும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, சுங்கச் செயல்பாடுகளை வெளிப்படையானதாகவும் செலவு குறைந்ததாகவும் ஆக்குகிறது.
  • இது தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் பயணிப்போருக்கு ‘பயண எளிமையை’ மேம்படுத்தி, தடையற்ற, சுமூகமான பயணத்தை வழங்கும்.
  • தடையற்ற, திறன் வாய்ந்த சுங்கச்சாவடி செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக, தானியங்கி வாகன எண் அறிதல், ஃபாஸ்டேக் போன்ற தொழில்நுட்பங்களை இது பயன்படுத்துகிறது.

நாட்டில் மின்னணு சுங்கக் கட்டண முறையை மாற்றி அமைப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), தேசிய நெடுஞ்சாலை-179பி-யின் தாம்பரம் – திண்டிவனம் பிரிவில் உள்ள பரனூர் சுங்கச்சாவடியில், தமிழ்நாட்டின் முதல் பல்தட தடையற்ற தானியங்கி சுங்கக் கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடைமுறையானது, வாகனங்களை நிறுத்தாமல் சுங்கச்சாவடி இடங்களைக் கடந்து செல்ல வழிவகுக்கும் தடையற்ற சுங்கக் கட்டண முறையை அறிமுகப்படுத்துகிறது.

Leave a Reply