தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல்! இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!- இதோ உத்தரவின் உண்மை நகல்.

rbhyiP2Evz

தமிழ்நாட்டில் 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தனித் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (செப்டம்பர் 07, 2026, திங்கள்கிழமை) வெளியிட்டுள்ளது.

மேலும் இவற்றுடன் புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் அஸாம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கும் அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள்: செப்டம்பர் 9, 2026

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்: செப்டம்பர் 16, 2026

மனுக்கள் மீதான பரிசீலனை: செப்டம்பர் 17, 2026

வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள்: செப்டம்பர் 19, 2026

வாக்குப்பதிவு நாள்: அக்டோபர் 6, 2026

வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு: அக்டோபர் 9, 2026

ஏற்கனவே கரூர், திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், விராலிமலை, பெருந்துறை ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட நாளை (செப்டம்பர் 08,2026) வரை சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

காலியாக உள்ள மேற்காணும் சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் பணி தொடர்ந்து பாதிக்கப்படும் என்பதால் இடைத்தேர்தலை நடத்த விடாமல் நீண்ட நாட்களுக்கு நீதிமன்றம் தடையை நீட்டிக்க வாய்ப்பில்லை. எனவே, அந்த தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு நிச்சயம் வெளியாகும்.

Leave a Reply