இந்தியாவின் மின்னணு பணப்பரிவர்த்தனை பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ள ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகம் (யுபிஐ) அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு தசாப்தம் நிறைவடைந்துள்ள நிலையில், மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள அதன் பயணத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் யுபிஐ அடைந்துள்ள பரந்த அளவிலான பயன்பாடு குறித்தும் அது மக்களைச் சென்றடைந்தவிதம் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த குறிப்பிடத்தக்க பயணம் அனைத்து இந்தியரும் பெருமைபடக்கூடியது என்று திரு மோடி தெரிவித்துள்ளார். யுபிஐ பயன்பாட்டின் அனுபவங்கள் குறித்தும் அது தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தைக் குறித்தும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து. சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
ஒரு தசாப்தத்திற்கு முன்பு யுபிஐ அறிமுகப்படுத்தப்பட்டது இது, இந்தியாவின் மின்னணு பணப்பரிவர்த்தனையின் பயணத்தில் பெரும் திருப்புமுனையாகும்.
யுபிஐ-ன் பரந்த அளவிலான பயன்பாடு, அது மக்களைச் சென்றடைந்த விதம் ஆகியவை அனைத்து இந்தியரும் அவசியம் பெருமைப்பட வேண்டிய அம்சமாகும்.
உங்களுடைய யுபிஐ பயன்பாட்டு அனுபவத்தையும் அது எவ்வாறு உங்கள் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறித்தும் என்னிடம் கூறுங்கள்…..
திவாஹர்
