இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) லால்குடி கிளை சார்பில் இருதயவியல் மற்றும் இரைப்பை குடலியல் அமர்வுகளைக் கொண்ட மாதாந்திர தொடர் மருத்துவக் கல்வி (CME) கூட்டம், ஆகஸ்ட் 18, 2026, செவ்வாய்க்கிழமை அன்று இரவு 9:00 மணியளவில் திருச்சி, தென்னூரில் உள்ள ஹோட்டல் ஆக்ஸினா லைகனில் நடைபெற்றது.
இதில் கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இருதயவியல் துறைத் தலைவர், டாக்டர் ஜி. ராஜேந்திரன் “Healthy Habits & Healthy Heart A Happy Life” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இரைப்பைக் குடலியல் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆ. ஜெரோம் டி’சௌசா, “Irritable bowel syndrome (IBS)” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) லால்குடி கிளையின் தலைவர் டாக்டர் ஆர்.டி. மணிராஜ், செயலாளர் டாக்டர் பி. நித்யானந்தம், பொருளாளர் டாக்டர் கே. சண்முக குமார் ஆகியோர் செய்தனர். இதில் இந்திய மருத்துவ சங்கத்தின் லால்குடி கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
–துரை திரவியம்.
