கேரளத்தில் சுகாதாரத் திட்டங்களின் செயல்பாடுகள்: மத்திய சுகாதார அமைச்சர் ஜெ பி நட்டா ஆய்வு.

கேரளத்தில் முக்கிய சுகாதாரத் திட்டங்களின் செயல்பாடுகள், பொது சுகாதாரம் சார்ந்த முன்முயற்சிகள் குறித்து மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா இன்று காணொளி வாயிலாக ஆய்வு நடத்தினார்.

அம்மாநில சுகாதார அமைச்சர் திரு கே முரளீதரன் முன்னிலையில் இந்த உயர் மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத்தில் காசநோய் இல்லாத இந்தியா இயக்கம், இலவச மருந்துகள் சேவை, இலவச நோய் கண்டறிதல் சேவை, தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் சுகாதாரத்திற்கான மனித வளம், மருத்துவக் கல்வி, மருந்துகளுக்கான ஒழுங்குமுறை, உணவுப் பாதுகாப்புத் தரநிலைகள் உள்ளிட்ட முக்கியத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. கேரளத்தின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று உறுதியளித்த திரு ஜெ பி நட்டா, தேசிய அளவிலான சுகாதாரத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்த மத்திய-மாநில அரசுகளின் தொடர் ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்தினார்.

Leave a Reply