வேகமான, பாதுகாப்பான, வசதியான மற்றும் நவீன இந்திய ரயில்வே, சாமானிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் பயண அனுபவமாகும்: நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே அமைச்சர்.

2026-27 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சுமார் ₹2.78 லட்சம் கோடி என்ற சாதனை அளவிலான நிதி ஒதுக்கீட்டின் ஆதரவுடன், இந்திய ரயில்வே முன்னெப்போதும் இல்லாத விரிவாக்கத்தையும் நவீனமயமாக்கலையும் கண்டு வருகிறது. ரயில்வே அமைச்சகத்தின் மானியக் கோரிக்கைகள் (2026-27) மீதான நாடாளுமன்ற விவாதத்திற்குப் பதிலளித்த திரு. அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே பட்ஜெட்டைப் பொது பட்ஜெட்டுடன் இணைத்தது ரயில்வேயின் ஒரு முக்கியக் கட்டமைப்புச் சீர்திருத்தம் என்றும் , இது மூன்று முக்கியப் பலன்களுக்கு வழிவகுத்துள்ளது என்றும் இன்று சுட்டிக்காட்டினார். இந்திய ரயில்வேயில் தற்போது நடைபெற்று வரும் இந்த மாற்றத்தை, “மெதுவான வளர்ச்சியிலிருந்து” “அதிவேகமான மாற்றத்திற்கு” மாறுவதாகவும், இது தேசியப் போக்குவரத்து நிறுவனத்திற்கு ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிப்பதாகவும் அவர் விவரித்தார்.

முதலாவதாக, இது நிதி ஒதுக்கீட்டில் கணிசமான மேம்பாட்டிற்கு வழிவகுத்தது . முன்னர் சுமார் ₹25,000–30,000 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு, நடப்பு நிதியாண்டில் சுமார் ₹2.78 லட்சம் கோடியாக அதிகரித்தது. இரண்டாவதாக, இது திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, புதிய சேவைகளை அறிமுகப்படுத்துவது மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது உட்பட, ஆண்டு முழுவதும் தொடர்ச்சியான முடிவெடுத்தல் மற்றும் ஒப்புதல்களை எளிதாக்கியது. மூன்றாவதாக, இது அதிக வெளிப்படைத்தன்மையையும் நிறுவனக் கண்காணிப்பையும் கொண்டுவந்தது . நிதி அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவற்றை உள்ளடக்கிய அமைப்புகள் மூலம் திட்டங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டன.

முந்தைய காலகட்டத்தில் சுமார் 15,000 கி.மீ. ஆக இருந்த புதிய தண்டவாளப் பாதைகளின் நீளம் , தற்போது ஏறத்தாழ 35,000 கி.மீ. ஆக அதிகரித்து, தண்டவாளப் பாதை அமைக்கும் பணி கணிசமாக வேகமெடுத்துள்ளது . மின்மயமாக்கலும் விரைவான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது; இது சுமார் 5,200 கி.மீ. இலிருந்து கிட்டத்தட்ட 47,000 கி.மீ. ஆக உயர்ந்து, 99% க்கும் அதிகமான மின்மயமாக்கல் வலையமைப்பை எட்டியுள்ளது .

பாதுகாப்பு உள்கட்டமைப்பைப் பொறுத்தவரை, மேம்பாலங்கள் (ROBs) மற்றும் கீழ்ப்பாலங்களின் (RUBs) எண்ணிக்கை சுமார் 4,000-லிருந்து ஏறத்தாழ 14,000 ஆக அதிகரித்துள்ளது. தானியங்கி சமிக்ஞை அமைப்பு சுமார் 1,500 கி.மீ-லிருந்து 4,000 கி.மீ-க்கும் மேலாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பான மற்றும் நவீனமான LHB பெட்டிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும், சமீபத்திய ஆண்டுகளில் சுமார் 48,000 பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார் . என்ஜின் உற்பத்தியும் சுமார் 12,000 அலகுகளாக உயர்ந்துள்ள நிலையில் , வேகன் சேர்க்கை 2 லட்சம் அலகுகளைத் தாண்டியுள்ளது .

சுரங்கப்பாதைகள், சரக்கு வழித்தடங்கள் மற்றும் மூலோபாய இணைப்பு

சுரங்கப்பாதை கட்டுமானத்தில் ஒரு முக்கிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது என்று திரு வைஷ்ணவ் குறிப்பிட்டார். 2014 ஆம் ஆண்டு வரை சுமார் 125 கி.மீ. சுரங்கப்பாதைகள் கட்டப்பட்ட நிலையில், அதன் பிறகு கூடுதலாக 486 கி.மீ. சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டு, வடகிழக்கு மற்றும் ஜம்மு காஷ்மீர் போன்ற கடினமான நிலப்பரப்புகளில் இணைப்பு வசதி குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply