குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள அமிர்த தோட்டத்தை நாளை (17.03.2026) மூத்த குடிமக்கள் பிரத்யேகமாக பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், தில்லி காவல்துறையின் மூத்த குடிமக்கள் பிரிவு, தேசிய சமூகப் பாதுகாப்பு நிறுவனம், அனுகிரகா பிராந்திய வளப் பயிற்சி மையம், பிரம்மகுமாரிகள் அமைப்பு ஆகியோருடன் ஒருங்கிணைந்து மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், மூத்த குடிமக்கள் அமிர்த தோட்டத்தை பார்வையிடுவதற்கு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 10,000-க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் இந்த அமிர்த தோட்டத்தை பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பார்வையாளர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் போக்குவரத்து உள்ளிட்ட தேவையான வசதிகள் செய்யப்படுகின்றன.
அப்போது புல்வெளிகள், பருவகால மலர்கள், பன்முகத் தோட்டக்கலை கண்காட்சிகள் ஆகியவற்றை பார்வையிடும் வாய்ப்பு மூத்த குடிமக்களுக்கு கிடைக்கும்.
திவாஹர்
