கர்நாடகாவின் மண்டியாவில் விளையாட்டு வளாகத்திற்கு மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, ஹெச்.டி. குமாரசாமி ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் கர்நாடகாவின் மண்டியாவில் ₹14 கோடி மதிப்பிலான பல்நோக்கு உட்புற விளையாட்டு வளாகத்திற்கு மத்திய இளைஞர் நலன்- விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா, மத்திய கனரக தொழில்கள், எஃகுத் துறை அமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி ஆகியோர் நேற்று (14.03.2026) அடிக்கல் நாட்டினர்.

மண்டியாவில் வேளாண் அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த புதிய வசதி உருவாகி வருகிறது. அடிக்கல் நாட்டும்போது, இரு அமைச்சர்களும்,  விளையாட்டு கலாச்சாரத்தை வலுப்படுத்தவும், இந்தப் பிராந்தியத்திலிருந்து அதிகமான சாம்பியன்கள் உருவாக வேண்டும் எனவும் மாவட்ட இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா, கேலோ இந்தியா முயற்சி என்பது அடிமட்ட அளவில் விளையாட்டு கலாச்சாரத்தை ஊக்கப்படுத்தவும், இந்தியாவை ஒரு முன்னணி விளையாட்டு நாடாக மாற்றவும் மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு தேசிய திட்டம் என்றார்.

Leave a Reply