முக்கிய ரயில்வே வழித்தடங்களில் ரயில் இயக்கம், டிஜிட்டல் தொடர்பு மறுசீரமைப்பு போன்றவற்றுக்காக ரயில்வே ₹765 கோடியை விடுவிக்க ஒப்புதல்.

இந்திய ரயில்வே, தனது செயல்பாடுகளை வலுப்படுத்தவும், ரயில் பாதை திறனை விரிவுபடுத்தவும், முக்கியமான பிரிவுகளில் தகவல் தொடர்பு அமைப்புகளை நவீனமயமாக்கவும் மொத்தம் ₹765 கோடிக்கு மேல் நிதியை விடுவிக்க அனுமதி அளித்துள்ளது.

அனுமதிக்கப்பட்ட திட்டங்கள் இரண்டு அதிக அடர்த்தி கொண்ட சரக்கு, பயணிகள் வழித்தடங்களில் மின்சார இழுவை அமைப்புகளை மேம்படுத்துவதையும், மேற்கு ரயில்வேயின் வதோதரா – மும்பை மத்திய பிரிவுகளில் கண்ணாடி இழை தொடர்பு விரிவாக்கத்தையும் உள்ளடக்கியது. கிழக்கு கடற்கரைப் பகுதியில் 106 கிலோ மீட்டர் துவ்வாடா-விசாகப்பட்டினம்-விஜயநகரம் பிரிவில் மின்சார இழுவை அமைப்பை மேம்படுத்துவதற்காக  ரயில்வே ₹318.07 கோடியை அனுமதித்துள்ளது.

பரபரப்பான ஹவுரா-சென்னை வழித்தடத்தில் அமைந்துள்ள இந்தப் பிரிவு, ஒடிசா, சத்தீஸ்கரிலிருந்து விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கனிமங்ககளைக் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய ரயில்வே முழுவதும் மின்சார இழுவை அமைப்புகளை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டு 2024–25 ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் உள்ளது.

தெற்கு மத்திய ரயில்வேயின் குண்டக்கல் பிரிவின் கீழ் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசத்தை உள்ளடக்கிய 126 கிலோ மீட்டர் ராய்ச்சூர்-குண்டக்கல் பிரிவில் மின்சார இழுவை அமைப்பை மேம்படுத்த இந்திய ரயில்வே ₹259.39 கோடியை அனுமதித்துள்ளது.

மேற்கு ரயில்வேயின் வதோதரா – மும்பை மத்திய பிரிவுகளில் தகவல் தொடர்பை வலுப்படுத்த ரயில்வே ₹187.88 கோடியை அனுமதித்துள்ளது. இந்தப் பணியின் கீழ், வதோதரா பிரிவில் 692 கிலோ மீட்டர், மும்பை பிரிவில் 308 கிலோ மீட்டர் உட்பட 1,000 வழித்தட கிலோமீட்டருக்கு கண்ணாடி இழைக் கேபிள்கள் அமைக்கப்படும்.

இந்த முயற்சிகள் நவீன ரயில்களின் நவீன மயமாக்கலை அதிகரித்து, டிஜிட்டல் தொடர்பு கட்டமைப்புகளை வலுப்படுத்தி ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்தும்.

Leave a Reply