கடந்த 2021 தேர்தலுக்கு முன்பு மக்களிடம் மனு கேட்டு பெட்டியோடு அலைந்தவர் தற்போது மக்களிடம் மனு வாங்கக் கூட முதல்வருக்கு மனமில்லையா?- எடப்பாடி கே பழனிசாமி கேள்வி.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி வட்டத்திற்கு உட்பட்ட விவசாய விளைநிலங்களை அரசு திட்டத்திற்காக கையாகப்படுத்துவதை எதிர்த்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முதல்வர் சந்தித்து மனு கொடுக்க வந்த நிலையில், திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தின் வாசலிலேயே வைத்து அவர்களை திமுக அரசின் காவல்துறை கைது செய்து அடைத்து வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஒரு முதல்வராக மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று பார்த்தால், மக்களிடம் மனு வாங்கக் கூட இன்றைய பொம்மை முதல்வருக்கு மனமில்லையா? கடந்த 2021 தேர்தலுக்கு முன்பு மக்களிடம் மனு கேட்டு பெட்டியோடு அலைந்தவர், ஆட்சியில் இருக்கும் போது ஏழை விவசாயிகளின் மனுவைப் பெறக் கூட மனமின்றி இருப்பது திரு. ஸ்டாலினின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டுகிறது. கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்து, அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து, அவர்களின் மனுவைப் பெறவேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு எடப்பாடி கே பழனிசாமி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply