நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கம் 2.0-ன் கீழ், திருவனந்தபுரம் மாநகராட்சியில் அதிக ஆபத்தான பகுதிகளில் கால்வாய் தூய்மைக்கு பாதுகாப்பான, துல்லியமான, மனிதர்கள் இல்லாத செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் ஜி-ஸ்பைடர் ரோபோக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மனிதர்களைப் பயன்படுத்தி கழிவுகளை அகற்றும் முறையை படிப்படியாக நீக்கும் நடவடிக்கையின் ஒரு முக்கிய பகுதியாக தம்பனூர் ரயில் நிலைய வளாகம் அருகே உள்ள ஆமையிழைஞ்சான் கால்வாயில் துப்புரவு பணியாளர் பாதுகாப்பை உறுதி செய்ய அணுக முடியாத இடங்களிலும் அதிக ஆபத்துள்ள இடங்களிலும் கழிவுகளை அகற்ற திருவனந்தபுரம் மாநகராட்சி ஜி-ஸ்பைடர் ரோபோக்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
இந்தக் கால்வாய் தம்பனூர் ரயில் நிலையத்திற்குக் கீழே செல்வதாலும் தொடர்ந்து நீர் போக்கு இருப்பதாலும் சிக்கலான பணிச்சூழல் இருப்பதாலும் மனிதர்கள் பாதுகாப்புடன் உள்ளே செல்வதற்கான வழி இல்லாததாலும் இதனை தூய்மை செய்வது பெரும் சவாலாக இருக்கும். இதன் காரணமாக வழக்கமான தூய்மை மற்றும் பராமரிப்பு செய்வதில் சிரமம் ஏற்பட்டது.
இதற்குத் தீர்வு காண உள்ளாட்சி அமைப்புகள் துறை அமைச்சர் திரு எம் பி ராஜேஷ், இந்த ரோபோ மூலமான தூய்மை நடைமுறையை தொடங்கி வைத்தார். இந்த முன்முயற்சி தூய்மைப் பணியாளர்களின் உயிர்களை காப்பாற்றுவதோடு செயல்பாட்டுத் திறனை விரிவாக்குகிறது. நீடிக்கத்தக்க நகர்ப்புற உள்கட்டமைப்பு முறைகளை வலுப்படுத்துகிறது.
எஸ்.சதிஸ் சர்மா
