தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 4.3.2026 அன்று தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் தமிழ்நாடு நீடிக்கக்கூடிய கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதார திட்டத்தின் கீழ் பிச்சாவரத்தில் 26.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் அலையாத்தி பாதுகாப்பு மையம், தமிழ்நாடு கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதாரம் (TN-SHORE) திட்டத்தின் கீழ் மரக்காணத்தில் 50.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச பறவைகள் மையம், ‘நீலகிரி வரையாடு திட்டத்தின்’ கீழ் கோயம்புத்தூர் மாவட்டம், காந்திபுரத்தில் நீலகிரி வரையாடு பாதுகாப்பு மையம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 2025 ஆம் ஆண்டிற்கான டாக்டர் ஏ.ஜே.டி. ஜான்சிங் வன உயிரின பாதுகாப்பு விருதினை மறைந்த டாக்டர் வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வழங்கிடும் விதமாக அவரது மகனிடம் வழங்கினார்.
எஸ்.திவ்யா
