மக்கள் மருந்தக வாரம் 2026-ன் 4-வது நாளான இன்று நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இலவச சுகாதாரப் பரிசோதனை முகாம்கள் நடைபெற்றன. இந்திய மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் குழு, மருந்துகள் துறை, ரசாயணம் மற்றும் உரங்கள் அமைச்சகம் ஆகியவை இவற்றுக்கு ஏற்பாடு செய்திருந்தன. மார்ச் 7 அன்று நடைபெறவுள்ள 8-வது மக்கள் மருந்தக தினத்தையொட்டி 2026 மார்ச் 1 முதல் 5 வரை, தேசிய அளவில் இந்த மக்கள் தொடர்பு முன்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
நாடு முழுவதும் ஹோலிப் பண்டிகைக் கொண்டாடப்பட்ட போதும், இந்த மருத்துவ முகாம்களில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இவற்றில் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை, தைராய்டு ஆகிய சோதனை நடத்தப்பட்டதோடு, குழந்தைகள் நலன் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. நாட்பட்ட நோய்களுக்குத் தீர்வு காண்பதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
4-வது நாள் முகாம்கள் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீர், ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்டன. நிதிச் சுமை காரணமாக மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் கிடைக்காமல் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய 2027 மார்ச் மாதத்திற்குள் 25,000 மையங்களை அமைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தக மையத்தை திறக்கும் ஆர்வமுள்ள தொழில்முனைவோர், மருந்தாளுநர்கள், மருத்துவர்கள், தகுதியுள்ள தனிநபர்கள், www.janaushadhi.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். பரவலான பங்கேற்பை ஊக்கப்படுத்த நிதியுதவியும், ஊக்கத்தொகையும் வழங்கப்படுகின்றன.
திவாஹர்
