ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2026 இல் இந்தியாவின் ஈடுபாடுகளுக்கு மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஸ்ரீ ஜோதிராதித்ய எம். சிந்தியா தலைமை தாங்கினார். GSMA மந்திரி திட்டம் மற்றும் MWC பிரதான மேடையில் உயர் மட்ட பங்கேற்புடன், மலிவு விலை, உள்ளடக்கிய மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள டிஜிட்டல் இணைப்புக்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை கோடிட்டுக் காட்டினார்.
GSMA அமைச்சர்கள் திட்டத்தின் நிறைவு சிறப்புரை: “செலவுத் தடையை உடைத்தல்”
“செலவுத் தடையை உடைத்தல்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற அமர்வின் போது, அமைச்சர்கள் நிலை அமர்வின் இறுதி உரையை ஸ்ரீ சிந்தியா நிகழ்த்தினார். உலகளவில் 3.1 பில்லியன் மக்களை அர்த்தமுள்ள டிஜிட்டல் பங்கேற்பிலிருந்து தொடர்ந்து விலக்கி வைக்கும் மலிவு விலை சவால்களை நிவர்த்தி செய்வதில் இந்த அமர்வு கவனம் செலுத்தியது.
பயன்பாட்டு இடைவெளியைக் குறைப்பதன் அவசரத்தை வலியுறுத்திய அமைச்சர், சாதனங்கள் மற்றும் சேவைகளின் மலிவு விலை டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கு மையமாக உள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
“உண்மையிலேயே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால், இணைப்பு உலகளாவிய மலிவு விலையில் இருக்க வேண்டும். நம் முன் உள்ள சவால் தொழில்நுட்பம் இல்லாதது அல்ல, மாறாக பில்லியன் கணக்கான மக்கள் டிஜிட்டல் பொருளாதாரத்தில் பங்கேற்பதைத் தடுக்கும் செலவுத் தடைகள்” என்று மத்திய அமைச்சர் கூறினார்.
கொள்கை சீர்திருத்தம், போட்டி மற்றும் அளவுகோல் மூலம் தரவு செலவுகளைக் குறைப்பதில் இந்தியாவின் அனுபவத்தை எடுத்துரைத்த அவர், “இந்தியாவின் டிஜிட்டல் பயணம், அளவு, புதுமை மற்றும் நிலையான கொள்கை கட்டமைப்புகள் செலவுகளை வியத்தகு முறையில் குறைக்கும் என்பதை நிரூபிக்கிறது. அடுத்த தலைமுறை இணைப்பு – 5G முதல் வளர்ந்து வரும் 6G சுற்றுச்சூழல் அமைப்புகள் வரை – மலிவு விலையில், உள்ளடக்கியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்வதே எங்கள் கூட்டுப் பொறுப்பு” என்று கூறினார்.
சாதனங்களின் மலிவு விலை, புதுமையான நிதி மாதிரிகள் மற்றும் நிலையான டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்புகளை செயல்படுத்த, அரசாங்கங்கள், தொழில்துறை, நிதி நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய அமைப்புகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த, பல பங்குதாரர் அணுகுமுறைக்கு ஸ்ரீ சிந்தியா அழைப்பு விடுத்தார்.
திவாஹர்
