பிரதமர் நரேந்திர மோதி, இஸ்ரேல் பிரதமருடன் உரையாடினார்.

தற்போதைய பிராந்திய சூழல் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெத்தன்யாகுவுடன் தொலைபேசி வாயிலாக விவாதித்தார்.

அப்போது, சமீபத்தில் நிலவும் சூழல் குறித்து இந்தியாவின் கவலையை தெரிவித்த பிரதமர், குடிமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மோதல்களை உடனடியாக நிறுத்த வேண்டியதன் அவசியம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டையும் பிரதமர் திரு மோடி வலியுறுத்தினார்.

Leave a Reply