தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் ரூ.840.76 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5,367 அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் .

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வரலாற்றில் முதல்முறையாக இன்று ஒரே நாளில் ரூ.840.76 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5,367 அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். ரூ.420.34 கோடி மதிப்பீட்டில் 1984 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கு இன்றையதினம் அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வரலாற்றில் முதல்முறையாக இன்று (2.3.2026) ஒரேநாளில் மறு கட்டுமானத் திட்டத்தின் கீழ், சென்னையில் 9 திட்டப்பகுதிகளில் 696.55 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4.035 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள். அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வெளி மாவட்டங்களில் 4 திட்டப்பகுதிகளில் 144.21 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1,332 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், என மொத்தம் 13 திட்டப்பகுதிகளில் 840.76 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 5367 குடியிருப்புகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார். மேலும், 2 திட்டப்பகுதிகளில் 420.34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1984 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

Leave a Reply