இந்திய கடற்படையின் பாய்மரப் பயிற்சிக் கப்பலான ஐஎன்எஸ் தரங்கினி, பிப்ரவரி 27, 2026 அன்று இலங்கையின் திரிகோணமலை துறைமுகத்துக்குப் பயிற்சிப் பயணமாக சென்றடைந்தது . இந்தக் கப்பலுக்கு இலங்கை கடற்படையின் கிழக்குப் பகுதியின் பிரதிநிதிகள் அன்பான வரவேற்பு அளித்தனர்.
விசாகப்பட்டினத்தில் நடத்தப்பட்ட சர்வதேச கடற்படை பயிற்சியில் இந்தக் கப்பல் சமீபத்தில் பங்கேற்றதைத் தொடர்ந்து திரிகோணமலைக்குப் பயணம் மேற்கொண்டது. ஐஎன்எஸ் தரங்கினியின் இலங்கைப் பயணம், இந்திய கடற்படைக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான நீண்டகால கடல்சார் உறவுகளையும் வளர்ந்து வரும் ஒத்துழைப்பையும் எடுத்துக் காட்டுகிறது.
எஸ்.சதிஸ் சர்மா
