இந்திய விமானப்படையில், விமானங்களை இயக்குவதில் உயர் தரநிலையை நிலைநிறுத்துவதை உறுதி செய்யும் வகையில், விமானக் குழு தேர்வு வாரியம், அதன் 23 – வது ஒருங்கிணைந்த கருவி மதிப்பீடு பயிற்றுவிப்பாளர் மற்றும் தேர்வாளர் பாடநெறிக்கான நிறைவு விழா பிப்ரவரி 27, 2026 அன்று ஹிண்டன் இந்தியா விமானப்படைத் தளத்தில் நடைபெற்றது. இந்த பாடநெறியின் கீழ் நடத்தப்பட்ட ஆறு வாரகால நிகழ்ச்சி, விமானத்தை இயக்குவதில் சிறந்து விளங்குவதற்கான இந்திய விமானப்படையின் வலுவான அர்ப்பணிப்புணர்வை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
இந்த விழாவில் இந்திய விமானப் படையின் தலைமை இயக்குநர் (ஆய்வு மற்றும் பாதுகாப்பு) ஏர் மார்ஷல் தேஜ்பீர் சிங், மதிப்பாய்வு செய்தார். அவரது நீண்டகால செயல்பாட்டு அனுபவம் இந்த மதிப்பாய்விற்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளது. போர் விமானம், சிவில் விமானப் போக்குவரத்து, ஹெலிகாப்டர், மற்றும் கடற்படை விமானப் பணியாளர்களிடையே தகுதி அடிப்படையில் முதலிடம் பெற்றதற்காக விங் கமாண்டர் தீபக் அவஸ்தி, விங் கமாண்டர் விஷால் ஜோஷி மற்றும் விங் கமாண்டர் ரோஹித் திவாரி ஆகியோருக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
ஆறு வார காலம் நடைபெற்ற இந்தபயிற்சியில், நான்கு வாரகாலம் தரைப் பயிற்சியாகவும், இரண்டு வாரகாலம் விமானத்தில் மேற்கொள்ளும் பயிற்சியாகவும் நடைபெற்றது. இது, மோசமான வானிலை மற்றும் உத்திசார் சூழல்களில் விமானபடையின் மேம்பட்ட நடவடிக்கைகளில் செயல்திறனை மதிப்பிடுவதில் உள்ள சிக்கல்கலுக்குத் தீர்வு காண்பதில் விமானப்படை அதிகாரிகள் தேர்ச்சி பெறுவதை உறுதி செய்தது.
எஸ்.சதிஸ் சர்மா
