நாட்டின் டிஜிட்டல் திறன் மேம்பாட்டு சூழலை வலுப்படுத்த ஒரு பெரிய உந்துதலாக, மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் செளத்ரி, இந்திய செயற்கை நுண்ணறிவுத் தாக்க உச்சி மாநாட்டிற்கு இடையே “பத்னா ஹை தோ யஹான் ஜூட்னா ஹை” அதாவது “நீங்கள் வளர விரும்பினால் இதில் இணையுங்கள்” என்ற தலைப்பில் நாடு தழுவிய விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்த பிரச்சார இயக்கத்தில் புகழ்பெற்ற நடிகர் அமிதாப் பச்சன் இணைந்துள்ளார். அவரது இந்த பங்கேற்பு திறன் இந்தியா டிஜிட்டல் மையம் (SIDH) பற்றிய விழிப்புணர்வை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவின் ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமான திறன், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்நாள் முழுவதும் கற்றல் ஆகியவற்றை மேம்படுத்தும்.
இந்த பிரச்சார இயக்கம் திறன் இந்தியா டிஜிட்டல் மையத்துக்கான அணுகலை மேலும் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஏற்கனவே 1.5 கோடிக்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட நபர்களை இணைத்து, நாட்டின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த டிஜிட்டல் திறன் தளங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
திவாஹர்
