குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பிப்ரவரி 22 அன்று தமிழ்நாட்டில் பயணம் மேற்கொள்கிறார்.

குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், நாளை (2026 பிப்ரவரி 22) தமிழ்நாட்டில் பயணம் மேற்கொள்கிறார்.

இந்தப் பயணத்தின் போது, மதுரை வண்டியூரில், கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் சிலைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் தலைமை விருந்தினராகப் பங்கேற்கிறார்.

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சௌமிநாராயணப் பெருமாள் கோயிலுக்கும், சிவகங்கையில் உள்ள ராணி வேலு நாச்சியார் அரண்மனைக்கும் குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதா கிருஷ்ணன் செல்ல உள்ளார்.

Leave a Reply