மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பாரத் மண்டபம், ஹால் எண். 14 இல் நடைபெற்ற இந்திய AI தாக்க உச்சி மாநாட்டில் சர்வதேச சூரிய சக்தி கூட்டணியின் (ISA) அரங்கிற்குச் சென்று, எரிசக்திக்கான AI மீதான உலகளாவிய நோக்கத்தை முன்னேற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகளின் வரிசையை மதிப்பாய்வு செய்தார்.
செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் தளங்கள் மற்றும் புவிசார் கருவிகள் எவ்வாறு பயன்பாடுகளை நவீனமயமாக்கலாம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பை துரிதப்படுத்தலாம் மற்றும் ISA உறுப்பு நாடுகளில் ஆற்றல் மீள்தன்மையை வலுப்படுத்தலாம் என்பதை நிரூபிக்கும் நடைமுறை, அளவிடக்கூடிய மாதிரிகளை அரங்கம் எடுத்துக்காட்டுந்தது.
சூரிய சக்தி பயன்பாடு மற்றும் டிஜிட்டல் நுண்ணறிவு ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பை இயக்குவதற்கும், நிகழ்நேர உகப்பாக்கம் மற்றும் சிறந்த கட்ட மேலாண்மையை செயல்படுத்துவதற்கும் ஒரு தளமாக, எரிசக்திக்கான உலகளாவிய AI மிஷனை இந்திய AI தாக்க உச்சி மாநாடு சிறப்பித்துக் காட்டியது.
திவாஹர்
