ஆந்திரப்பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படைக் கண்காட்சியை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று பார்வையிட்டார். இந்தக் கண்காட்சியில் 70-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த கடற்படைகள் பங்கேற்றுள்ளன.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், கடல்சார் பாரம்பரியங்களில் நாடுகளுக்கிடையே ஒற்றுமை, நம்பிக்கை, மதித்தல் ஆகியவற்றை கடற்படைக் கண்காட்சி பிரதிபலிப்பதாக கூறினார். பல்வேறு நாடுகளின் கொடிகள், மாலுமிகளைக் கொண்ட கப்பல்கள் ஒற்றுமையின் உணர்வை காட்சிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார். இந்த உறுதிப்பாட்டுடன் கூடிய கூட்டுக் கடற்படை எந்தவொரு சவால்களையும், வலிமையுடன் எதிர்கொள்ள முடியும் என்பதை உலக சமூகத்திற்கு உணர்த்துவதாக அவர் கூறினார். கடல்சார் துறை உட்பட சர்வதேச நட்புறவுகளில் இந்தியாவின் அணுகுமுறை உலகம் ஒரு குடும்பம் என்ற நமது நெறிமுறைகளால் வழிகாட்டப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
திவாஹர்
