மாநிலங்களவையில் 37 உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் பத்து மாநிலங்களைச் சேர்ந்த 37 உறுப்பினர்களின் பதவிக்காலம் 2026 ஏப்ரலில் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் 2026 பிப்ரவரி 26 (வியாழக்கிழமை) அன்று தொடங்குகிறது. வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு 2026 மார்ச் 5 வியாழக்கிழமை கடைசி நாளாகும்.  வேட்பு மனு மீதான பரிசீலனை 2026 மார்ச் 6 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறுகிறது. வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு 2026 மார்ச் 9 (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். வாக்குப்பதிவு 2026 மார்ச் 16 (திங்கட்கிழமை) அன்று நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 2026 மார்ச் 16 (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு என் ஆர் இளங்கோ, திரு பி செல்வராசு, திரு எம் தம்பிதுரை, திரு திருச்சி சிவா, டாக்டர் கனிமொழி என்விஎன் சோமு, திரு ஜி கே வாசன் ஆகியோரது பதவிக்காலம் 2026 ஏப்ரல் 2 அன்றுடன் நிறைவடைகிறது.

மாநிலங்களவையில் உறுப்பினர்களாக உள்ள மகாராஷ்டிராவைச் சேர்ந்த 7 பேர், ஒடிசாவில் 4 பேர், மேற்கு வங்கத்தில் 5 பேர், அசாமில் 3 பேர், பீகாரில் 5 பேர், சத்தீஸ்கரில் 2 பேர், ஹரியானாவில் 2 பேர்,, இமாசலப்பிரதேசத்தில் ஒருவர் தெலங்கானாவில் 2 பேர்  உள்ளிட்ட 37 உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது.  

Leave a Reply