2019ம் ஆண்டு இதே நாளில் புல்வாமாவில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார். அவர்களின் தேசபக்தி, உறுதிப்பாடு மற்றும் தேசத்திற்கான சேவை நமது கூட்டு நனவில் என்றென்றும் பதிவிடப்படும் என்றும், ஒவ்வொரு இந்தியரும் அவர்களின் நீடித்த துணிச்சலிலிருந்து பலத்தைப் பெறுவார்கள் என்றும் திரு மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி வெளியிட்டுள்ள பதிவில், கூறியிருப்பதாவது;
“2019ம் ஆண்டு இதே நாளில் புல்வாமாவில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களை நினைவு கூர்கிறேன். தேசத்திற்கான அவர்களின் பக்தி, உறுதிப்பாடு மற்றும் சேவை நமது கூட்டு நனவில் என்றென்றும் பதிவிடப்படும். ஒவ்வொரு இந்தியரும் அவர்களின் நீடித்த துணிச்சலிலிருந்து பலத்தைப் பெறுகிறார்கள்.”
திவாஹர்
