தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர் என் ரவி மற்றும் பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான திருமதி. குஷ்பு ஆகியோர் குறித்து ஆபாசமாகவும், அவதூறாகவும் பொது மேடையில் பேசிய குற்றத்திற்காக திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் 3 ஆண்டு 3 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு நீதிமன்றம் 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.
–கே.பி. சுகுமார்.
