உலக வானொலி தினம் என்பது தொலைதூர கிராமங்களாக இருந்தாலும் சரி, பரபரப்பான நகரங்களாக இருந்தாலும் சரி, மக்களின் நம்பகமான குரலாக இருக்கும் ஒரு ஊடகத்தைக் கொண்டாடுவது பற்றியது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார். பல ஆண்டுகளாக, வானொலி சரியான நேரத்தில் தகவல்களை வழங்கி, திறமையை வளர்த்து, படைப்பாற்றலை ஊக்குவித்து வருகிறது என்று திரு. மோடி குறிப்பிட்டார்.
“மன் கி பாத் மூலம், நமது மக்களின் சமூக வலிமையை வெளிக்கொணர்வதில் வானொலியின் ஆற்றலை நான் நேரடியாக அனுபவித்திருக்கிறேன். இந்த மாத நிகழ்ச்சி பிப்ரவரி 22 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். நிகழ்ச்சிக்கான உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்”, என்று ஸ்ரீ மோடி கூறினார்.
பிரதமர் X இல் பதிவிட்டார்:
“உலக வானொலி தினம் என்பது தொலைதூர கிராமங்களாக இருந்தாலும் சரி, பரபரப்பான நகரங்களாக இருந்தாலும் சரி, மக்களுக்கு நம்பகமான குரலாக இருக்கும் ஒரு ஊடகத்தைக் கொண்டாடுவதாகும். பல ஆண்டுகளாக, வானொலி சரியான நேரத்தில் தகவல்களை வழங்கி, திறமையை வளர்த்து, படைப்பாற்றலை ஊக்குவித்து வருகிறது. இந்த ஊடகத்துடன் தொடர்புடைய அனைவரின் முயற்சிகளையும் அங்கீகரிக்கும் நாள் இது.”
#MannKiBaat மூலம், நமது மக்களின் சமூக வலிமையை வெளிக்கொணர்வதில் வானொலியின் திறனை நான் நேரடியாக அனுபவித்திருக்கிறேன். இந்த மாத நிகழ்ச்சி பிப்ரவரி 22 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். நிகழ்ச்சிக்கான உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
திவாஹர்
