தமிழக அரசு 1.31 கோடி மகளிருக்கு ரூ. 5,000 வரவு வைத்து ஒரு கையில் பணம் கொடுத்து மறு கையில் டாஸ்மாக் மூலம் பணம் பறிக்க முயற்சிப்பதையும், அரசியல் சூழ்ச்சியாக ஓட்டு வாங்க அழுத்தத்தை கொடுக்கும் முயற்சியையும் மக்கள் புரிந்து கொள்வார்கள்.
ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதையும் மக்கள் புரிந்து கொண்டு செயல்படுவார்கள்
தமிழக அரசு நடைபெற இருக்கின்ற தேர்தலுக்காக அரசியல் சூழ்ச்சியாக வாக்கு வாங்க மேற்கொள்ளும் முயற்சி மக்கள் மத்தியில் எடுபடாது.
தமிழக அரசு 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயணாளிகளுக்கும் 5 ஆயிரம் ரூபாய் வரவு வைத்திருக்கிறது.
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ. 3 ஆயிரம் மற்றும் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ. 2 ஆயிரம் என மொத்தம் ரூ. 5 ஆயிரம் இன்று வரவு வைக்கப்பட்டுள்ளது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இன்னும் மகளிர் உரிமைத் தொகை கொடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மகளிருக்கு பணம் கொடுப்பதை தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) வரவேற்கிறது. ஆனால் அரசியல் சூழ்ச்சியாக மக்களிடம் வாக்கு வாங்க மேற்கொள்ளும் அழுத்தத்தை ஏற்காது.
குறிப்பாக தேர்தலை காரணம் காட்டி ஒரு கையில் பணம் கொடுத்து மறு கையில் டாஸ்மாக் மூலம் பணம் பறித்து வருவாயைப் பெருக்க முயற்சிக்கிறது தமிழக அரசு.
எனவே நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து வாக்குகளை பெற, ஆட்சி அதிகாரத்தால் மக்கள் படும் பல்வேறு துன்பங்களை மறைக்க தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த செயல்பாட்டை மக்கள் நன்கு அறிவார்கள்.
ஏற்கனவே தி.மு.க அளித்த வாக்குறுதிகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில் இந்த அறிவிப்பானது மக்களிடம் அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
எனவே தமிழக அரசு சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வாக்கு சேகரிக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளும் முயற்சியாக இன்றைய அறிவிப்பும் செயல்பாடும் அமைந்திருப்பதை மக்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கே.பி.சுகுமார்
