இந்தியக் கடற்படை கடல்சார் பாதுகாப்புக்காக ஒருங்கிணைந்த பணிக்குழு 154-ன் தலைமைத்துவத்தை ஏற்றது.

இந்திய கடல் பிராந்தியத்திலும், மற்ற பகுதிகளிலும் கடல்சார் பாதுகாப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஒருங்கிணைந்து செயல்படுவது என்ற இந்தியாவின் உறதிப்பாட்டை குறிப்பிடும் வகையில், ஒருங்கிணைந்த பணிக்குழு 154-ன் தலைமைத்துவத்தை இந்திய கடற்படை ஏற்றது.

இந்த தலைமைத்துவத்தை மாற்றுவதற்கான நிகழ்ச்சி பஹ்ரைனின் மனாம்மாவில் உள்ள ஒருங்கிணைந்த கடல்சார் படையின் தலைமையகத்தில் 2026 பிப்ரவரி 11 அன்று நடைபெற்றது. இதற்கு அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த துணை அட்மிரல் ஏ ரென்ஷா தலைமை வகித்தார். இந்திய கடற்படையின் துணைத் தளபதியான துணை அட்மிரல் தருண் சோப்தி மற்றும் இதர நாடுகளின் ராணுவ உயர் தலைவர்கள் இதில் பங்கேற்றனர். தற்போதைய ஒருங்கிணைந்த பணிக்குழு 154-ன் தளபதியான இத்தாலி கடற்படையைச் சேர்ந்தவரிடம் இருந்து இந்திய கடற்படை கமாண்டர் மிலிந்த் எம் மோகஷிந்த் முறைப்படி பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஒருங்கிணைந்த கடல்சார் பாதுகாப்பு படையில் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்நாடுகளின் கடற்படைக்கு இடையே பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டை முக்கிய நோக்கமாகக் கொண்டு ஒருங்கிணைந்த பணிக்குழு 154 செயல்படுகிறது.   

Leave a Reply