தமிழகத்தின் சிறந்த கைவினைஞர்களுக்கு பூம்புகார் விருதுகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பித்தார்.

சென்னை, கலைவாணர் அரங்கில், தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க கைவினைப் பொருட்கள் மற்றும் கைவினைஞர்களின் திறனை உலக அளவில் பிரபலப்படுத்தும் விதமாக மாபெரும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தினை (Mega Handicrafts Exhibition-cum-Conference) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், கைவினைத் தொழிலுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 65 வயதுக்கு மேற்பட்ட 10 சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளையும், கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகள் ஆகியவற்றில் சிறந்த 10 கைவினைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளையும் வழங்கி சிறப்பித்தார்

Leave a Reply