கடற்படை ஆயுதங்கள் காப்பக தலைமை இயக்குநராக திரு திவாகர் ஜெயந்த் பாதுகாப்பு அமைச்சகத்தின் கடற்படை தலைமையகத்தில் 2026 பிப்ரவரி 2 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதுவரை அப்பொறுப்பு வகித்த திரு பி உபாத்யாய் 2026 ஜனவரி 31 அன்று ஓய்வு பெற்றார்.
திரு திவாகர் ஜெயந்த் இந்தியக் கடற்படையின் ஆயுத காப்பக சேவையின் 1991-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்தவராவார். 1992-ம் ஆண்டு டிசம்பர் 28 அன்று கடற்படையின் ஆயுதக் காப்பக அமைப்பில் இணைந்த அவர், மும்பை, விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் உள்ள ஆயுதக் காப்பகங்களில் தலைமைப் பொது மேலாளர், பொது மேலாளர், முதன்மை இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்து, 33 ஆண்டுகள் அவர் சேவையாற்றியுள்ளார்.
திவாஹர்
