மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தரம், ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் உலகளவில் பிரபலப்படுத்துவதை கவனத்தில் கொண்டு, ஆயுஷ் முறையை வலுப்படுத்தவும், மருத்துவ மதிப்புமிக்க சுற்றுலாவுக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை நிலைநிறுத்துவதை நோக்கமாக கொண்டு இதற்கான நடைமுறைகளை அறிவித்தார்.
மருத்துவ சுற்றுலா சேவைகளுக்கான முக்கிய பகுதியாக இந்தியாவை திகழச்செய்யும் வகையில், தனியார்துறை கூட்டாண்மையுடன் 5 பிராந்திய மருத்துவ மையங்களை அமைப்பதற்கு மாநில அரசுகளுக்கு ஆதரவளிக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இந்த மையங்கள் மருத்து சேவைகள், கல்வி மற்றும் ஆராய்ச்சியுடன் கூடிய ஒருங்கிணைந்த சுகாதார பராமரிப்பு வளாகங்களாக இயங்கும்.
தரமான கல்வி, சிகிச்சை பாராமரிப்பு மற்றும் ஆராய்ச்சியை விரிவுப்படுத்த புதிதாக 3 அகில இந்திய ஆயுர்வேத நிறுவனங்கள் அமைக்கப்படவுள்ளது.
பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் உலகளாவிய விழிப்புணர்வுக்கு ஜாம் நகரில் உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம் புதுப்பிக்கப்படவுள்ளது.
எம்.பிரபாகரன்
