குடியரசுதினக் கொண்டாட்டங்கள் 2026-ன் ஒரு பகுதியாக மண்டல அளவில் நடைபெற்ற தேசிய பள்ளி பேண்டு வாத்திய போட்டிகள் நிறைவடைந்தது. புதுதில்லியில் 2026 ஜனவரி 24 அன்று தேசிய பாலபவனில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் பங்கேற்க 16 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. பிராஸ் பேண்டு மாணவர்கள், பிராஸ் பேண்டு மாணவிகள், பைப் பேண்டு மாணவர்கள், பைப் பேண்டு மாணவிகள் பிரிவில் ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் (கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு) தலா 4 அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனன.
ஒவ்வொரு பிரிவிலும், முதல் 3 இடம் பெறும் அணிகளுக்கு முறையே முதல் பரிசாக ரூ.51,000, இரண்டாம் பரிசாக ரூ.31,000, மூன்றாம் பரிசாக ரூ.21,000 ரொக்கப்பரிசுடன் கோப்பைகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் மற்ற அணிகளுக்கு ஆறுதல் பரிசாக ரூ.11,000 ரொக்கப்பரிசு அளிக்கப்படும். ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சகம், நியமித்துள்ள நடுவர்கள், அவர்களுடைய செயல்திறன்களை மதிப்பீடு செய்வார்கள். இப்போட்டியை பாதுகாப்பு அமைச்சகமும், கல்வி அமைச்சகமும் இணைந்து நடத்துகின்றன.
திவாஹர்
