மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ஸ்ரீ சிவராஜ் சிங் சௌஹான் இன்று புது தில்லியில் உள்ள கிருஷி பவனில் உயர்மட்டக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO), உலக உணவுத் திட்டம் (WFP), சர்வதேச வேளாண் மேம்பாட்டு நிதியம் (IFAD), உலக வங்கி, ஆசிய மேம்பாட்டு வங்கி (ADB), Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit (GIZ) மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) உள்ளிட்ட முக்கிய சர்வதேச மற்றும் பலதரப்பு மேம்பாட்டு கூட்டாளர்களின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நீண்டகால கொள்கைகளை உருவாக்குவது உட்பட ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், நீண்டகால வளர்ச்சி முன்னுரிமைகளை சீரமைப்பது மற்றும் நிலையான வளர்ச்சி முயற்சிகளை ஆதரிப்பது குறித்து இந்தக் கூட்டம் கவனம் செலுத்தியது.பிரதிநிதிகளை வரவேற்ற ஸ்ரீ சௌஹான், இந்தியாவின் விவசாயப் பயணம் தனித்துவமானது என்றும், உணவுப் பற்றாக்குறையிலிருந்து முக்கிய விவசாயப் பொருட்களின் முக்கிய ஏற்றுமதியாளராக மாறுவது மற்றும் சர்வதேச அமைப்புகளின் பங்கு ஆகியவற்றால் குறிக்கப்பட்டுள்ளது என்றும் எடுத்துரைத்தார். உணவுப் பாதுகாப்பை நாடு வெற்றிகரமாக அடைந்துள்ளதாகவும், நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கும் அதே வேளையில் ஊட்டச்சத்து பாதுகாப்பை முன்னேற்றுவதில் இப்போது உறுதியாக கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியா தனது அனுபவங்களையும் சிறந்த நடைமுறைகளையும் மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள நல்ல நிலையில் உள்ளது என்றும், உலகளாவிய கண்டுபிடிப்புகள் மற்றும் பிற இடங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வெற்றிகரமான மாதிரிகளிலிருந்தும் கற்றுக்கொள்வதாகவும், இதன் மூலம் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பரஸ்பர வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கவும் முடியும் என்றும் அவர் மேலும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
திவாஹர்
