ஓய்வூதியம் பெறுவோருக்கு 6 மாதத்துக்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு இணையாக அகவிலைப்படி அறிவிக்கப்படும். இந்த நிலையில், அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் அறிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
உறுதியளிக்கப்பட்ட 50% ஓய்வூதியம் வழங்குவதற்கு பயனாளிகளின் 10% பங்களிப்போடு ஓய்வூதிய நிதியம் வழங்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் இறந்துவிட்டால் அவர் பெற்று வந்ததில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். அரசு அலுவலர்கள் பணி ஓய்வு, பணி காலத்தில் இறக்க நேரிட்டால் ரூ.25 லட்சம் வரை பணிக்கொடை வழங்கப்படும். தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆண்டுதோறும் ஓய்வூதிய நிதியத்துக்கு தமிழ்நாடு அரசின் பங்களிப்பாக ரூ.11,000 கோடி வழங்கும். அரசு ஊழியர்கள் பெறும் கடைசி மாத சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும். 10 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் ஓய்வூதியம் வழங்கப்படும்.

கே.பி.சுகுமார்