கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட முதலாவது மாசுக்கட்டுப்பாட்டுக் கப்பல் சமுத்திர பிரதாப் கடலோரக் காவல் படையில் இணைப்பு.

கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட முதலாவது மாசுக்கட்டுப்பாட்டுக் கப்பல் சமுத்திர பிரதாப் கடலோரக் காவல் படையில் நேற்று (23.12.2025) இணைக்கப்பட்டது. மத்திய அரசின் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட இந்தக் கப்பலின் 60 சதவீத பாகங்கள் உள்நாட்டு தயாரிப்பாகும்.

இந்தக் கப்பல் கடலோரக் காவல் படையின் செயல்பாட்டுத் திறனை  கணிசமாக மேம்படுத்தும். 116.5 மீட்டர் நீளமும் 16.5 மீ அகலமும் கொண்ட இந்தக் கப்பல் நவீனக் கட்டமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. கடலில் ஏற்படும் மாசுகளை அகற்ற இக்கப்பல் பயன்படுத்தப்படும். குறிப்பாக கடலில் ஏற்படும் எண்ணெய் கசிவுகளை துல்லியமாக பிரித்து சுத்திகரிக்கும் திறன் கொண்ட தொழில்நுட்ப அமைப்புகள் இக்கப்பலில் உள்ளன. இந்தக் கப்பலை கடலோரக் காவல் படையுடன் இணைக்கும் விழாவில், கோவா கப்பல் கட்டும் தளம், கடலோரக் காவல் படை ஆகியவற்றில் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

Leave a Reply